ஏனைய மதங்களில் மஹ்தி

ஏனைய மதங்களில் மஹ்தி
தெய்வீக மற்றும் உலகளாவிய சீர்திருத்தவாதி என்ற வகையில் வாக்களிக்கப்பட்ட இமாம்மஹ்தி பற்றிய நம்பிக்கை அதிகமான மதங்கள் மற்றும் கோட்பாடுகளில்காணப்படுகின்றது.
இஸ்லாத்தில் மட்டுமின்றி யூத, கிறிஸ்தவ, இந்து, பௌத்த சொராஸ்திரிய மதங்களிலும்தெய்வீக் சீர்திருத்தவாதி பற்றிய நம்பிக்கை காணப்படுவதோடு அவரை எதிர்பார்த்தவண்ணமும் உள்ளனர். ஹிந்துக்களின் மதநூலான கீதையில் வந்துள்ளதாவது. 'உலகம் சீர்கெட்டு விட்டது.பிறகு இறுதிக் காலப்பகுதியில் ஓர் அரசர் வெளியாகுவார். அவர் எல்லா சனங்களுக்கும்தலைவராகவும் வழிகாட்டியாகவும் திகழ்வார். அவர் உதவி பெற்றவர் என அழைக்கப்படுவார்' உலகம் முழுவதிலும் ஆதிக்கம் செலுத்தி தன் மார்க்கத்தில் மக்களை நுழைவிப்பார். அவர்தம்மை விசுவாசிப்போர் நிராகரிப்போர் ஒவ்வொருவரையும் அறிந்திருப்பார். அவர் இறைனிடம்எதையேனும் வேண்டினால் இறைவன் உடனே அதனை அவருக்கு நிறைவேற்றிக் கொடுப்பான்.
சொராஸ்தியரின் சீடரான ஜாமஸ்ப் தனது நூலில் குறிப்பிடுகிறார் 'ஹாஷிம் கோத்திரப்பரம்பரையிலிருந்து அரேபிய மண்ணில் ஒரு மனிதர் தோன்றுவார். அவர் ஆஜானுபாகுவானஉடலமைப்பைக் கொண்டிருப்பார். அவர் தனது பாட்டனாரின் மார்க்கத்தைப் போதிப்பார்.அவருடன் சக்திவாய்ந்த பெரும்படையொன்று காணப்டும். அவர் பாரசீகம் நோக்கிச் சென்றுஅங்கு புனருத்தாரணங்களை மேற்கொண்டு இவ்வுலகை நீதியால் நிரப்புவார். அவரது நீதியானஆட்சியின் கீழ் ஓராயும் ஆடும் ஒரே பாத்திரத்தில் நீர் அருந்தும்.
சொராஸ்தியரின் சமய நூல்களில் ஒன்றான ஸந்த் கூறுகிறது அச்சந்தர்ப்பத்தில் யஸ்தான் (நலவுகளின் கடவுள்) புறம் இருந்து பெரும் பெற்றி கிடைக்கும் அஹ்ரிமனின் படையின்வல்லமை அனைத்தும் பூமியுள் புதைந்து விடும். மேலெழுவதற்கான எவ்வித வழியும்அவர்களுக்கு இருக்காது. எனவே இவ்வுலகம் அதன் ஈடேற்றத்தை அடைந்து கொள்ளும். மனிதஇனம் மகிழ்ச்சியில் திளைக்கும்.
விவிலியத்தின்ட பழைய ஏற்பாட்டில், இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக்கேட்டேன். நான் அவனை ஆசிர்வதித்து அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும்பண்ணுவேன். அவன் பன்னிரண்டு பிரபுகளைப் பெறுவான். அவனைப் பெரிய ஜாதியாக்குவேன். எனவும் 'நல்லவர்கள் பூமியை வசப்படுததிக் கொளவார் கள். அபரிமிதமான சமாதானத்தில் அவர்கள்திளைத்திருப் பார்கள்எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அல்குர்ஆன் இக்கருத்தை பின்வருமாறு சுட்டிக் காட்டுகின்றது 'நிச்சயமாக நாம்சபூரில் திக்ருக்குப் பின்னர் எழுதியிருக்கின்றோம். நிச்சயமாக இப்பூமியை என்னுடையஅடியார்களில் நல்லவர்கள் தாம் அனந்தரம் கொள்வார்கள்.
இதில் சபூர் என்பது தாவூத் நபியின் வேதமும்திக்ர் என்பது மூஸா நபியின் தௌராத் வேதமும்ஆகும். இறைவன் குறிப்பிடுகின்றான்- 'மனிதர்களே! உங்களில் எவரேனும் மெய்யாகவேவிசுவாசம்கொண்டு நற்கருமங்களைச் செய்தால் அவர்களுக்கு முன்னர் சென்றோரைப் போன்றுபூமிக்கு அதிபதிகளாக்கி வைப்பதாகவும் இவர்களுடைய பயத்தை அமைதியும் பாதுகாப்புமாகமாற்றி விடுவதாகவும் அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான்.
பிறிதோர் இடத்தில் அல்லாஹ் கூறுகின்றான்: 'பூமியில் ஒடுக்கப்பட்டவர்கள் மீதுஅருள் புரிந்து, அவர்களைத் தலைவர்களாக்கி வாரிசுகளாவும் ஆக்கிவைக்க நாம்விரும்பினோம். மேற்குறிப்பிட்ட இறைவனங்கள், இந்த உலகம் அதம் இறுதிக் காலப்பகுதியில்நல்லடியார்களின் ஆட்சியின் கீழ் வரும் என்பதையும் அப்போது அவர்கள் உலகத்தில்வழிகாட்களாகவும், தலைவர்களாகவும் திகழ்வார்கள் என்பதையும் சான்று பகர்கின்றஆதாரங்களாக விளங்குகின்றன. மனிதன் வீழ்ச்சியடைந்து வாழ்வின் அதள பாதாளத்துக்குச் செல்கின்ற போது விழித்துக்கொள்கிறான். நீதியும் அமைதியும் சமாதானமும் அபிவிருத்தியும் வெறுமனே அதிகாரம், பலம், சிந்தனை, தொழிநுட்பம் என்பவற்றால் மட்டும் சாத்தியப் படுவதில்லை என்பதைஉணர்சின்றான். தெய்வீக ஞானத்துடனும் வழிகாட்டலுடனும் தன்னைப் பிணைத்துக் கொளவதேவிடுதலைக்கான ஒரேவழி என்பதை உணர்கிறான். மனித இனம் அதள பாதாளத்தில் இருந்துமீள்வதெனின் உலகளாவிய ரீதியில் நீதியை நிலைநாட்டுகின்ற ஒரு தெய்வீகசீர்திருத்தவாதியின் தேவை உணரப்படுகிறது.

கருத்துக்கள்

اஒரு கருத்துரையை

*ஆஸ்டெரிக் குறிக்கப்பட்ட புலங்கள் நிச்சயமாக மதிப்பு இருக்க வேண்டும்.