இமாமத்

இமாமத்
இமாமத் அல்லது கிலாபத் என்பதற்கு தலைமைத்துவம் என பொருள்படும்இச்சொற்றொடர்களுக்கு தனிப்பிரயோகமும் உண்டு அது யாதெனில் நபிகளாரின்வபாத்திற்குப்பிறகு முஸ்லிம் உம்மாவுக்கென உருவான தலைமைத்துவத்தை சொல்வதாகும்இக்கருத்தை நிராகரிப்போர் எவரும் கிடையாது ஏனெனில் தலைமைத்துவம் ஒரு சமுதாயத்திற்குஅல்லது ஒரு பிரிவினருக்கு சாத்தியமாக இருக்க வேண்டிய ஒரு விடயம் என்பதை எல்லோரும்உணர்வர் பொதுவாக முஸ்லீம்களிடத்தில் குறிப்பிட்ட கருத்துடைய தலைமைத்துவத்தைஏற்றுக்கொள்ளும் தன்மை இருந்தும் ஆனால் அத்தலைமைத்துவம் எவ்வாரான ரீதியில் உருவாக்கவேண்டும் என்பதில் ஷீயா சுன்னியினருக்கு இடையில் இரு வௌ;வேரான கருத்துகள்காணப்படுகின்றது இவ் வௌ;வேரான கருத்து வேறுபாடு முஸ்லீம் உலகத்தை இரண்டாக ஷீயாசுன்னா என்று பிரிக்குமளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அது கருதப்படுகின்றது ஷீஆசுன்னிகளிடம் எஞ்சியிருக்கும் ஏனைய சிறு பிரிவினைகள் இம்மாபெரும்வேறுபாட்டிலிருந்துதான் உருவமெடுக்கின்றது என்பது எல்லோரும் அறிந்த ஒன்றே எனவேஇமாமத் ஷீயாக்களின் பார்வையில் நபிகளாரின் நிர்ணயிப்புப்படி அஹ்லுல்பைத்தில்தோன்றிய பனிரெண்டுபேரே தகுதியானவர்கள் என்றும் நபிகளாரின் வபாஅத்திற்குப்பின்இஸ்லாமிய மார்க்கசட்டதிட்டங்களை இப்பனிரெண்டு பேரிடத்தில் தான் கேட்டரிய முடியும்அவர்கள் இல்லாதவிடத்து அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ள ஸஹீகானஹதீஸ்களிலிருந்து அறிய வேண்டும் இவர்களின் ஹதீஸ்களோடு ஏனையோரின் கருத்துக்கள்முட்டிக் கொண்டால் இவ் இமாம்களின் ஹதீஸ்களைத்தான் எடுத்துபின்பற்றி நடக்க வேண்டும்ஏனெனில் இவர்கள் நபிகளாரின் அமுதவாக்குகளையும், வேண்டுகோள்களையும் தன் உம்மத்தினரைஎடுத்து நடக்கும்படி ஏவிய கட்டளைகளையும் சுருக்கமாக கூறின் நபிகளாரின் சுன்னாவைகளஞ்சியப்படுத்தி கூட்டிக் குறைக்காது வைத்துப் பாது காப்பதற்குவிசுவாசமானவர்களாகும் என்று கூறுகின்றனர்.
ஆனால் இமாமத்திற்கு தகுதியான இமாமைத் தெரிவுசெய்வது சுன்னிகளின் பார்வையில்இமாம் மஷுரா அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார் என்று நம்புவதோடு முன்னுள்ள இமாம்பின்வரப்போகும் கலீபாவைத் தெரிவுசெய்தார்;. உதாரணத்திற்கு கலீபா அபூபக்கர் கலீபாஉமரை தெரிவு செய்தது என்பதையும் ஏற்றுக் கொள்கின்றனர். அத்தோடு பலத்தாலும்பலாத்காரத்தாலும் தான் ஒருவர் தலைவராக வர முடியும்; என்றும் கருதுகின்றனர்.அப்பாஸியாக்களும் பனீ உமையாக்களும் உஸ்மானியர்களும் அந்த ரீதியில் தான் முஸ்லிம்உம்மாவுக்கு கலீபாவாக தோன்றினார்கள் என்பது அவர்களின் கருத்து. இஸ்லாமிய மார்க்கசட்டங்களை அறியும் விடயத்தில் ஸஹாபாக்களினால் அறிவிக்கப்பட்ட ஸஹீஹான ஹதீஸ்களின்பால் தான் செல்லவேண்டும் என்றும் அறிவித்திருக்கும் ஹதீஸை ஏற்றுக்கொள்ள வேண்டும்என்கின்றனர். ஏனெனில் அனைத்து ஸஹாபாக்களையும் நீதமானவர்கள் என்பதாக நம்புகின்றனர்.ஸஹாபாக்கள் ஸிப்பீன், ஜமல் போன்ற யுத்தங்களில் இருதரப்போராளிகளாக இருந்துஒருவரையொருவர் கொலை செய்து கொண்டாலும் சரி அவர்கள் அனைவரும்நம்பத்தகுந்தவர்களேயாகும் எனவும் நம்புகின்றனர். இஸ்லாமிய வரலாற்றில் ஏற்பட்டநிகழ்வுகளை வைத்து சிந்திக்கின்ற போது அவர்கள் அனைவரும் நீதமானவர்கள், நம்பத்தகுந்தவர்கள் தானா என்பதில் சந்தேகம் எழுகின்றது இறைவன் நாடினால் ஸஹாபாக்கள்பற்றி ஆய்வை பின்னர் குறிப்பிடுவோம்.
ஷீயா, சுன்னியினருக்கு மத்தியில் மேற்கண்டவாறு வேறுபாடுகள் காணப்படுவதால் முதல்கட்டத்திலேயே அவர்களில் ஒரு பிரிவினரை இவர்கள் தான் சத்தியவாதிகள் உண்மையாளர்கள்மற்றவர்கள் வழி கெட்டவர்கள் என்று கூறுவதற்கு முன் அவர்கள் தங்கள் வாதங்களுக்குமுன்வைக்கும் ஆதாரங்களை சற்று நிதானத்தோடு உற்றுநோக்கி எப்பிரிவினரின் வாதம்உண்மையானது என்று கண்டுவிட்டு வாதம் உண்மையானவரை நல்லவர் சத்தியப்பாதையில் உள்ளவர்என்று சித்தரிப்போம். முக்கியமாக இருதரப்புகளின் வாதப்பிரதி வாதங்களை வைத்துசிந்திக்கின்றபோது நாம் பிடிவாதமில்லாத, பக்கசார்பற்று ஒரு நடுத்தர வாதியாகவேஇருக்க வேண்டும். அப்போது தான் உண்மையின் பக்கம் சென்றுவிட முடியும். இல்லையேல் பிடிவாதத்துடன் செயல்பட்டால் உண்மை எதுவென தெரிந்தும் அதை மறைக்க வேண்டிய நிலைஏற்பட்டு விடும் இறைவன் எம் அனைவரையும் இக்கெட்ட செயலில் இருந்து காப்பாற்றிஉண்மையை உரியபடி ஏனையவர்களுக்கு எற்றிவைக்க உதவுவானாக!
இமாமத் பற்றிய நபிகளாரின் வாக்குகள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்களின் வபாத்திற்குப் பின் இஸ்லாமியசமுகத்திற்கு நேர் வழியைக்காட்டும் இமாம்களாக தோன்றுவதற்கு தகுதியுடையோர்நபிகளாரால் அறிமுகம் செய்யப்பட்ட அஹ்லுல் பைத்தினர்களாவர். இவ்விடயம் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் நவின்ற ஹதீஸ்கள் அதிகமாக இருந்தாலும்அவைகளில் முக்கியமானவைகளை இங்கு கூறுகின்றோம். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் நவின்றதாக ஸைத் பின் அர்க்கம் (ரழி) கூறுகின்றார், மனிதர்களே! நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் என்பதால் மிகக் கூடிய கெதியில்இறைத்தூதர் இஸ்ராயீல் அலைஹிஸ்ஸலாம் என்னிடம் வர உள்ளார் இறை அழைப்பை ஏற்றுஇவ்வுலகை விட்டு பிரிந்து அவன் அழைப்பிற்கு பதில் கூறவுள்ளேன். எனவே நீங்கள்வழிதவராமல் இருப்பதற்கு முக்கியமான இரு பொக்கிஷங்களை உங்கள் மத்தியில் விட்டுச்செல்கின்றேன். அதில் முதலாவது ஒளியும் நேர்வழியும் உள்ள அல்லாஹ்வின் வேதமாகும்அதில் உங்களுக்கு நேர்வழி உள்ளதால் அதைதன் வாழ்வில் ஏற்று நடந்து கொள்ளுங்கள்மற்றது எனது அஹ்லுல்பைத் எனது அஹ்லுல்பைத் விடயத்தில் அல்லாஹ்வை உங்களுக்கு ஞாபகமூட்டுகிறேன் என்று மூன்று முறை கூறினார்கள். (ஆதாரம் ஸஹீஹ் முஸ்லிம்) திர்மீதி ஜாபிரிப்னு அப்தில்லாஹ் வாயிலாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹிவஸல்லம் அவர்கள் ஹஜ் கடைமையின்போது அறபாவுடைய நாளில் ஒட்டகத்தின் மீதுஅமர்ந்தவர்களாக பிரசங்கம் செய்தார் அதில் நவின்றதாக அறிவிப்பதாவது. ஏய் மனிதர்களே! நான் இரு பொக்கிஷங்களை உங்கள் மத்தியில் விட்டுச் செல்கின்றேன்நீங்கள் அவ்விரண்டையும் பின்பற்றும் காலமெல்லாம் வழிதவர மாட்டீர்கள். அவைஅல்லாஹ்வின் வேதமும் எனது அஹ்லுல்பைத்துமாகும் எனக்கூற நான் செவியுற்றேன் எனஅறிவிக்கின்றார்கள். (ஆதாரம். திர்மிதி 2-308 ஹதீஸ் 3788) ஷீஆக்கள் குர்ஆனோடு அஹ்லுல்பைத்தையும் பின்பற்றினால் தான் மனிதன் நேர்வழியில்வாழ முடியும் என்கின்றனர். இவ்விடயத்தை நோக்கமாக கொண்டே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஆலிஹி வஸல்லம் அவர்களும் இவ்விரு பொக்கிஷங்களையும் ஒரே இடத்தில் கூறியுள்ளார்கள்.ஆதலால் மனிதன் குர்ஆனோடு அஹ்லுல்பைத்தினரையும் தன் வாழ்க்கைக்கு முன்மாதிரியாகஏற்று நடந்தால் அவன் நேர்வழியிலும் சத்தியப்பாதையிலும் இருக்கின்றான் என்பதுஉறுதி.
மேற்கண்ட ஹதீஸை அஹ்லுல் சுன்னாக்களின் முஸ்லிம், திர்மிதி போன்ற பெரும் பெரும்உலமாக்கள் அறிவித்திருந்தும் அவர்களில் பலர் இவ்வாறான ஹதீஸ்களைக் கண்டும்காணாதவர்கள் போலும் இன்னும் சிலர் அதை நிராகரித்தும் நடப்பது ஆச்சரியமான ஒருவிடயமாகும் அத்தோடு இந்த ஹதீஸினுடைய இடத்தில் அபூ ஹுரைராவால் அறிவிக்கப்பட்ட, 'நான் உங்கள் மத்தியில் இரு பொக்கிஷங்களை விட்டுச் செல்கின்றேன்அவ்விரண்டையும் நீங்கள் பின்பற்றும் காலமெல்லாம் நேர்வழியிலிருப்பீர்கள் அவைகுர்ஆனும் எனது சுன்னாவுமாகும்.' என்ற ஹதீஸ்தான் சரியானது என்று கூறுகின்றனர். மேற்கண்ட அபூ ஹுரைரா அறிவித்த சுன்னாவும் குர்ஆனும் என்ற ஹதீஸ் ஸிஹாஹுஸ்ஸித்தாஎனும் அரும் பெரும் சுன்னாக்களின் ஆறு முக்கிய கிரந்தங்களில் எதிலும் கிடையாதுஅத்தோடு புகாரி, நஸாயீ தகபி போன்றோர் அவ்ஹதீஸை ழயீபானது (பலயீனமானது) என்றுஅறிவித்திருக்கின்றார்கள். (ஆதாரம் அஹ்மத்பின் மஸ்வுத் பின் ஹமதான் ஷர்ஹு உஸுலி இஃதிகாதி அஹ்லிஸ்ஸுன்னா வல்ஜமாஆ பக்கம் 80)
குர்ஆனும், சுன்னாவும் என்ற அபூ ஹுரைராவால் அறிவிக்கப்பட்ட ஹதீஸை ஹாகிம் என்பவர்தனது முஸ்தத்ரக் எனும் நூலில் மாத்திரமே அறிவித்துள்ளார். முஸ்தத்ரக் எனும் ஏடுஸிஹாஹுஸித்தாவில் இல்லாத ஒன்றாக இருந்தும் ஸிஹாஹுஸித்தாக்களில் ஸஹீஹ் முஸ்லிமுக்குகொடுக்கப்படும் மதிப்பும், பெறுமதியும் அதற்கில்லை என்பதையும் யாவருமறிவர். இமாம்முஸ்லிம் திர்மிதி போன்றோர் குர்ஆனும், அஹ்லுல் பைத்தும் என்கிறார்கள் ஹாகிம்மட்டும் குர்ஆனும் சுன்னாவும் என்கிறார்.
குர்ஆனும், அஹ்லுல்பைத்தும் என்ற ஹதீஸை இமாம் முஸ்லிம் கூறியுள்ளார். என்றாலும்முஸ்லிம் கிரந்தம் மதிப்பிலும் பெருமதியிலும் முஸ்தத்ரகை விட உயர்ந்தது என்பதாலும், ஹதீஸின் ஸனத் நன்றாக இருப்பதாலும், அவ்ஹதீஸை அறிவித்திருப்பவர்களை (ராவிகளை)பலயீனமானவர் (ழயீபானவர்கள்) என்று எவரும் கூறாததாலும் நாங்கள் அதை ஆதாரமாக ஏற்றுக்கொள்கிறோம். மேற்கூறப்பட்ட இரு ஹதீஸ்களும் ஒன்றோடு ஒன்று எதிராக இருக்காமலிருப்பதற்காகஅவ்விரண்டையும் ஒன்று சேர்த்து சுன்னாவை அஹ்லுல்பைத்தினர் மூலமாக பெறுவோம் என்றகருத்திற்கு சரணடைவது சிறந்ததே!
மாறாக சுன்னா என்றுள்ள ஹதீது தான் சரி என்று வாதாடுவது இரு விபரீதங்களைஏற்படுத்தும். 1) அஹ்லுல் சுன்னத் வல் ஜமாஅத்தாரின் ஹதீஸ் கலை அறிஞர்களின் கருத்தில் ஸஹீஹ்முஸ்லிம் அரும் பெரும் இடத்தை வகிப்பதால் அதில் கூறப்பட்ட குர்ஆனும் அஹ்லுல்பைத்தும் என்றஹதீஸை புறக்கனித்து குர்ஆனும்சுன்னாவும் என்று முஸ்தத்ரக் எனும் பெறுமதி குறைந்த ஏட்டில் பதியப்படு;ள்ளதைமேன்மைப்படுத்தி உயர்த்துவது நன்றன்று.
2) சுன்னத்தி என்று ஏற்றுக்கொள்வது அறிவுப்புலனுக்கு அப்பாற்பட்டதொன்று ஏனெனில்சுன்னத்தி என்று தனிமையாக குறிப்பிடப்பட்டுள்ளதாலும் அதிலிருந்து எவ்வித பதிலையும்நாம் புரிந்து கொள்ள முடியாதுள்ளது. ஏனெனில் இஸ்லாத்திலுள்ள அனைத்துப் பிரிவினரும்மத்ஹபுகளும் நான்தான் நாயகத்தின் உண்மையான சுன்னாவைப் பின்பற்றுவதாக கோஷமிட்டுகூறிக் கொள்கின்றனர். அதேநேரத்தில் அவர்களுக்கிடையில் எண்ணிலடங்கா வேறு பாடுகள்இருப்பதையும் காணமுடிகின்றது. ஆம் இப்படி ஒவ்வொரு குழுக்களிடையிலும் காணப்படும்வேறுபாட்டுக்கு அடிப்படைக்காரணம் நாயகத்தின் சுன்னத்தை பலர் பலமாதிரிஅறிவித்துள்ளதேயன்றி வேறில்லை. இவ்விடயம் குர்ஆனின் வியாக்கியானத்திலும் விபரீதங்களை ஏற்படுத்தியது.
ஏனெனில்குர்ஆனுக்கு வியாக்கியானம் பண்ண நபிகளாரின் ஹதீஸ் தான் தேவைப்படுகின்றதுஅவ்ஹதீஸ்கள் பலகோனங்களிலுள்ளதால் வியாக்கியானங்களும், விளக்கவுரைகளும்பலவகைப்படுகின்றது ஹதீஸ்களும், தப்ஸீர்களும் பலவகைகளாக ஆகிவிட்டதால் முஸ்லீம்களும்பல பிரிவுகளாக பிரிந்தனர். இவர்கள் 73 கூட்டங்களாக பிரிவர் என நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஆலிஹி வஸல்லம் கூறியிருக்கின்றார்கள். பின்பற்றி வாழ்க்கையில் எடுத்து நடக்க எப்பிரிவினரின் சுன்னத்தின் பால் செல்வது? எவர்கள் உண்மையில் உள்ளனர்? என்ற வினாக்கள் தானாக இங்கு எழுகின்றது. எதிர்காலத்தில் இப்படியாக தத்தளித்து திரிவோம் என்பதற்காகவே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஆலிஹி வஸல்லம் அவர்கள் எம்மை நேரானபாதையில் வழிநடத்த அஹ்லுல் பைத்தை அறிமுகம்செய்துள்ளார்கள். நாயகத்தின் மறைவிக்குப்பின் முஸ்லீம்கள் தங்கள் தூய்மையான இஸ்லாத்தின்வாழ்க்கையை பெற சிறமப்படுவார்கள். தத்தளித்து அலைமோதி திரிவார்கள் என்று அஞ்சியநாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி வஸல்லம் அவர்கள் நேரான பாதையை எமக்கு அறிவித்துஎனது சுன்னத்தை அதன் தூயவடிவில் நீங்கள் பெற்றுக் கொள்ள அஹ்லுல் பைத்தினரின்கதவைத்தட்டுங்கள். அவர்களே எனது சுன்னத்தை கூட்டிக்குறைக்காமல் உங்களுக்குகாட்டித்தரவும் கற்றுத்தரவும் தகுதியானவர்கள் என்று அஹ்லுல்பைத்தை அறிமுகம்செய்துள்ளார்கள்.
ஏனெனில் அஹ்லுல் பைத்தானவர்கள் பாவமேதும் செய்யாத பரிசுத்தவான்கள், தூய்மையானவர்கள் இறைவனே அவர்களை தூய்மைப்படுத்தி சகல வித தீமைகள், தீங்குகள், அருவருப்புக்கள், அசுத்தங்களிலிருந்தும் அவர்களை சுத்தப் படுத்தியுள்ளான். அவர்கள்ஒரு போதும் பொய் சொல்லமாட்டார்கள். அவர்கள் ஒருபோதும் நாகத்தின் சுன்னாவை மறைத்துவிடவோ, கூட்டிக் குறைக்கவோ துணியமாட்டார்கள். அது இவ்வாரிருக்;க அஹ்லுல்பைத்என்றவுடன் அதில் வேறெதையும் நினைக்கவோ, கற்பனை செய்யவோ முடியாது. சுன்னாவென்றுசொல்லிக் கொள்ளும் குழுவினர் பிரிந்துள்ளது போல் அஹ்லுல்பைத்தி;ல் அவ்வாறானபிரிவினை கிடையாது. எனவே வழிகேட்டிலிருந்தும், பித்னாக்களிலிருந்தும் மனிதன்விடுதலை பெற்று ஈருலகிலும் வெற்றி பெற விரும்பினால் நபிகளாருக்குப் பின்அல்குர்ஆனையும் அஹ்லுல் பைத்தையும் நபிகளார் வேண்டியதற்கிணங்க பின்பற்றட்டும் அதுவேசிறந்த வழி!

கருத்துக்கள்

اஒரு கருத்துரையை

*ஆஸ்டெரிக் குறிக்கப்பட்ட புலங்கள் நிச்சயமாக மதிப்பு இருக்க வேண்டும்.